ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முசிறி கிராமத்தில் இளங்கோ என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, 60 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி, ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு, 3 டவுசர் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.