தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நள்ளிரவில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மோதிக் கொண்டதால் பதற்றம் நிலவியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக நிர்வாகிகளுக்கு இதுவரை பொறுப்புகள் அறிவிக்கப்படாததால், கட்சி நிர்வாகிகள் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்த நிலையில், சுமங்கிலி ராஜா அணியைச் சேர்ந்த மனோஜ் என்பவர், எதிரணியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மீதான வழக்குகள் குறித்து வாட்ஸ்அப்பில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இருதரப்பினரும் நள்ளிரவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த 3 நிர்வாகிகள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.