10 வருடங்களுக்கு பின் அப்பாஸ், சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
1996 ஆம் ஆண்டு கதிரின் காதல் தேசம் படம் மூலம் அப்பாஸ் கதாநாயகனாக அறிமுகமானார்.
50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாகக் கருதப்பட்ட அப்பாஸ், போதிய பட வாய்ப்பு இல்லாத நிலையில், குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் அப்பாஸ் நடிக்கவுள்ளார்.