பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருவதை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் 452 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
பிரதமர் மோடி பங்கேற்று, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தைத் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதற்காக மாலத்தீவிலிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தனி விமானத்தில் இன்று இரவு 7.50 மணியளவில் விமான நிலையத்துக்குப் பிரதமர் வருகிறார்.
அவருக்கு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். இதனையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாக டிஐஜி மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.