ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பரிதாபமாகப் பலியாகினர்.
கூவர் கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக பொதிக்குளம் கிராமத்திற்கு டிராக்டரில் சென்றனர்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியான நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.