பாலஸ்தீனத்திற்கு ஐநா அங்கீகாரம் வழங்க வேண்டுமென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பிரான்சின் இந்த நடவடிக்கையை அக்டோபர் 7 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் அறைந்த அறை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைதியை பின்னுக்குத் தள்ளும் முயற்சி என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதே போல் மேக்ரானுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.