அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வீசிய சூறைக்காற்றில் கேம்பர் வாகனம் உருண்டோடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கலிஃபோர்னியா மாகாணத்தில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேம்பர் வாகனம் காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் உருண்டோடியது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.