உலகின் நம்பகமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வணிக புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் உலகின் நம்பகமான தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் பிரதமர் மோடி 75 சதவீத மதிப்பெண்களுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் 59 சதவீத மதிப்பெண்ணுடன் இரண்டாவது இடத்தையும், 45 சதவீத மதிப்பெண்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.