பிரதமரின் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்கு தளம், வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை முப்பெரும் விழாவாக கொண்டாட மத்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெற உள்ளது.
விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தொடர்ந்து அவரின் வருகைக்காக கோயிலுக்கு அருகே ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டது. ஆனால் அவ்வழியாக உயர் மின்னழுத்த கம்பி செல்வதால் ஹெலிகாப்டர் இறங்கு தளம் பொன்னேரி பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.