காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழப்பது மட்டுமின்றி, உயிர் பிழைத்தவர்களுக்கும் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட காசாவில் 2023 அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய போர் இன்றுவரை முடிவை எட்டவில்லை.
இதனால், அங்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. மனிதாபிமான அமைப்புகளின் உதவியின் மூலம் உணவுகளைப் பெற முயற்சித்தாலும், இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமாகத் தாக்குதலில், உணவு வாங்கச் செல்லும் வழியிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள காசா குழந்தைகள், தங்களுடைய வாழ்நாள் முழுவதும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.