அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியச் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் ஜி.பி.பிர்லா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து அனுப்பும், நிசார் செயற்கைக்கோள் வரும் 30ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாகக் கூறினார்.
இந்தாண்டு 12 ஏவுகணைகளை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், தற்போது விண்வெளி சுற்றுப்பாதையில் இந்தியாவின் 55 செயற்கைக்கோள்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.