ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழங்களின் சீசன் துவங்கி உள்ளதால் அதன் விற்பனை நகர் பகுதிகளில் அதிகரித்து வருகிறது.
குளிர்ச்சியான பகுதிகளில் மட்டுமே நன்கு விளையும் மருத்துவகுணம் மிகுந்த இந்த நீர்க்குமிழி பழங்கள் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலையடிவார கிராமங்களில் நல்ல விளைச்சல் கண்டு மரங்களில் காய்த்து தொங்குவதோடு அதற்கு நல்ல விலையும் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….
மஞ்சள், சிவப்பு, ரோஸ், ஆகிய மூன்று நிறங்கள் கலந்து காய்க்கும் வாட்டர் ஆப்பிள் என்ற நீர்க்குமிழி பழங்களுக்கு பன்னீர் கொய்யா என்ற பெயரும் உண்டு.பொதுவாக மலைப்பகுதிகளில் நல்ல குளிர்ச்சியான இடங்களில் நன்கு விளையக்கூடிய இந்த நீர்க்குமிழி பழங்களின் சீசன் தற்போது துவங்கியுள்ளது.
ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலையடிவார கிராம பகுதிகளிலும் வீடுகளிலும் ஆர்வமாக வளர்க்கப்படும் இந்த நீர்க்குமிழி பழங்களின் சீசன் துவங்கி இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கண்டுள்ளது.சர்க்கரை நோய் , நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ குணம் மிகுந்த இந்த நீர்க்குமிழி பழங்கள் நல்ல உணவு என்று மருத்துவர்களாலே கூறப்படும் நிலையில் இந்த பகுதிகளில் நல்ல விளைச்சல் கண்டு மரங்களில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழங்கள் காய்த்து தொங்கும் நிலையில் இதனை பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்ணுவதால் வியாபாரிகள் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை கொள்முதல் செய்து கொள்வதாக விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சீசன் தொடங்கியிருப்பதால் , ஆண்டிப்பட்டி நகர் பகுதியிலுள்ள , சாலையோர பகுதிகளில் இந்த வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது