பிரதமர் மோடியின் வருகையை யொட்டி அரியலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை முப்பெரும் விழாவாக கொண்டாடப்படவுள்ளது.
இந்த விழாவிற்காக அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்கு பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய மண்டல ஜஜி நிர்மல் குமார் ஜோஷி தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பிரதமரின் வருகைக்காக சோழகங்கம் என்னும் பொன்னேரியில் புதிதாக ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஹெலிகாப்டரை இறக்கி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.