தூத்துக்குடியில் விரிவாக்கப்பட்ட விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிலையில், பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆபரேசன் சித்தூர் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்து இன்று 452 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைப்பதாக தெரிவித்தார்.
இதுதமிழகத்துக்கு மத்திய அரசு 11-லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி உள்ளதாகவும் கூறினார்.
சோழாபுரம் நிகழ்ச்சியில் நாளை பிரதமர் கலந்து கொள்வது தமிழர்களுக்கு பெருமை. என்றார்.
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக தலைவர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என கேட்ட கேள்விக்கு இது அரசியல் பேசக்கூடிய நேரம் அல்ல திருவிழாவாக கொண்டாட கூடிய நேரம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்