திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நீலகிரி மாவட்டம் பந்தலூரில் பலத்த காற்றுடன் பெய்த மழையில், அரசு மேல்நிலைப்பள்ளியின் மேற்கூரை மொத்தமாகப் பறந்து, அருகிலுள்ள வீட்டில் விழுந்து சேதப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பகல் நேரத்தில், பள்ளிக் குழந்தைகள் இருக்கும் நேரத்தில் இது போன்று நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, ஆட்சிக்கு வந்தவுடன், 10 ஆயிரம் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் என விமர்சித்துள்ளார்.