விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த உள்ளதாக இந்து முன்னணியின் மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சாந்தாஸ்ரமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேசிய இந்து முன்னணியின் மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் நடப்பாண்டிற்கான விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்தில் தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பில் வைக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் காவல்துறை பல்வேறு தடை விதித்தாலும் திட்டமிட்டபடி விநாயகர் வழிபாடு நடத்தப்படும் என தெரிவித்தார். சேலத்தில் தனியார் சார்பில் முருகன் சிலை வைக்கப்பட்ட இடம் சுற்றுலாதளம் என அரசு அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய தாமு வெங்கடேஸ்வரன்,
அதனை கண்டித்து வரும் 29ம் தேதி பெத்தநாயக்கன்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.