ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடர் கன மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரியகொடிவேரி, மேவானி, புளியம்பட்டி உள்ளிட்ட கரையோர கிராமங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.