கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 151 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து காளியப்பகவுண்டன்புதூரில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் தரை பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.