நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காளியண்ணன் பெயர் வைக்க வேண்டும் - அண்ணாமலை
Sep 15, 2025, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காளியண்ணன் பெயர் வைக்க வேண்டும் – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jul 28, 2025, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திரப் போராட்டத் தியாகி  காளியண்ணன்  பெயரை நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  சுதந்திரப் போராட்டத் தியாகி அமரர் ஐயா T.M. காளியண்ணன் அவர்கள், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும், தமிழகத்தின் முதல் சட்டப் பேரவையில் உறுப்பினராகவும், மகாத்மா காந்தி, பண்டிட் நேரு, அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும் ஆவார் என தெரிவித்துள்ளார்.

தமது பொதுவாழ்வில், தமிழகம் முழுவதும் பல நூறு அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் அமையவும் காரணமாக இருந்தவர். தமது சொந்த நிலங்களை, ஏழை, எளிய மக்களுக்குத் தானமாக வழங்கி, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் முன்னேற முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.

இத்தனை சிறப்புக்குரிய  காளியண்ணன் பெயரை, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக, பொதுமக்களால் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழக அரசு இதுவரை இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கெல்லாம், தனது தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதலமைச்சர்  முக ஸ்டாலின்  ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்த  காளியண்ணன் பெயரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வைக்க ஏன் மறுக்கிறார்? என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பகுதிகளின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களையே அங்குள்ள பேருந்து நிலையம், கல்லூரிகள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் பொது இடங்களுக்கு வைக்க வேண்டும் என்பது, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் திமுக எப்போதுமே, மக்களுக்காகப் பாடுபட்ட தமிழகத்தின் பல்வேறு தலைவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்வதையே வேலையாக வைத்திருக்கிறது. நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு,  காளியண்ணன் பெயரை வைப்பது குறித்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் உடனடியாக முடிவெடுக்கவில்லை என்றால், பொதுமக்களைத் திரட்டி, உண்ணாவிரதம் உள்ளிட்ட கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தவிருப்பதாக, கொங்கு நாட்டு வேளாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருக்கின்றன.

எனவே, இனியும் தாமதிக்காமல், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு, காளியண்ணன்  பெயரை வைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: freedom fighter martyr Kaliyannan. namebjpannamalaiNamakkal District Government Medical College Hospitalfreedom fighter martyr Kaliyannan.
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1.05 லட்சம் கன அடி நீர் வரத்து – வெள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய் : ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை!

Related News

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

அனுமதியின்றி லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் – தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கடல் மட்ட உயர்வால் ஆபத்தில் இருக்கிறது ஆஸ்திரேலியா!

சீனாவின் 5 விரல் உத்தி – திபெத்திய முன்னாள் பிரதமர் எச்சரிக்கை!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி – வெற்றி பெறுவாரா தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி?

உரான் ஏவுகணையை ஏவி பயிற்சி மேற்கொண்ட ரஷ்யா!

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

இம்பாலில் இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை!

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!

சீனா : சிம்பன்சி குட்டிக்கு செல்போன் காட்டாதீர்கள்!

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத வாழ்க்கை!

இந்தியர்களின் பழக்கத்தை கண்டு வியப்பதாக அமெரிக்க பெண் வீடியோ!

திமுகவில் நிலவிவந்த குழப்பங்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் கடிதம் வாயிலாகத் தீர்வு – வழக்கறிஞர் பாலு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies