தொடர் கனமழை காரணமாக பைக்காரா அணையில் இருந்து உபர் நீர் வெளியேற்றப்படுவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள 13 அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன.
இதில் முக்கிய நீர்ப்பிடிப்பு அணையான 99 அடி கொள்ளளவு கொண்ட பைக்காரா அணை தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 400 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவை இன்றி ஆற்றின் அருகே செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.