ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டிலிருந்து திலகா என்பவர் ரயிலில் அரக்கோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
தக்கோலம் அருகே ரயில் சென்ற போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் திலகா அணிந்திருந்த 12 சவரன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இதில் நிலை தடுமாறி திலகா கீழே விழுந்து காயமடைந்த நிலையில், போலீசார் மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.