பீகார் மாநிலம், பாட்னாவில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்கியது.
இதனால் வீதிகளில் நடக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், மழைநீருடன், கழிவுநீரும் கலந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.