ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராம்பனில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான போஸ்டர்களுடன் வலம் வந்த கார் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
குஜராத் மாநிலம், போர்பந்தரைச் சேர்ந்தவர்கள் காத்ரி ஜாவேத் ஆசாத் மற்றும் மக்வானா குமார்.
இவர்கள் இருவரும் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில், போர்பந்தர் முதல் பஹல்காம் வரையிலும் சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக தங்கள் கார்களில் ஆப்ரேஷன் சிந்தூர் புகழ் பெண் அதிகாரிகளான விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோரின் உருவப்படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டியபடி ராம்பனில் வலம்வந்தனர்.