ஒடிசா மாநிலம், ஜாஜ்பூரில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணி நடைபெற்றது.
பைதரணி நதியின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, தசரத்பூர் மற்றும் ஜாஜ்பூர் தொகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநில அரசின் பேரிடர் மீட்புக் குழுவினர், படகுகள் மூலம் சென்று வெள்ளத்தால் வீடுகளுக்குள் முடங்கியவர்களைப் பத்திரமாக மீட்டனர்.