ஈரோடு மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
வெண்டி பாளையம் பகுதிகளில் உள்ள குப்பைக் கிடங்கில், 60 வார்டு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, புகைமூட்டத்தால் பாதிப்புக்கு உள்ளான மக்கள், குப்பைக் கிடங்கை அகற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர்.