திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிவராஜ்குமார் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்குத் தேவஸ்தான அதிகாரிகள் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கி, வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
பின்னர், கோயில் வெளியே இருந்த ரசிகர்கள் அவருடன் போட்டோ மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.