தமிழகம் முழுவதும் வரும் 1ம் தேதி முதல் சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் சுமார் 15 கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதில் ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் ஆயில் சிலிண்டர் நிரப்பும் நிறுவனங்களின் உற்பத்தியைப் பாதியாகக் குறைத்தது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்தனர்.
மேலும் அனைத்து லாரிகளுக்கும் சமமான வேலை வாய்ப்பை வழங்கிட வலியுறுத்திய சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.