சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!
Nov 4, 2026, 08:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சிவ பக்தராகவே மாறிய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவ பக்தியில் மூழ்கிய அவர் புதுச்சேரியில் சிவன் கோயிலைக் கட்டவும் திட்டமிட்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த 41 வயதான ஹோஷி தகாயுகி, டோக்கியோவில் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை நிலையங்களை நடத்தி வந்தவர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த அவர், பனை ஓலைச் சுவடி நாடி ஜோதிட அமர்வில் கலந்து கொண்டார். அவரது பெயருக்கு வந்த ஓலைச்சுவடியில், கடந்த காலத்தில் இமயமலையில் வாழ்ந்ததாகவும், நிகழ்காலத்தில் இந்து ஆன்மிக வழியில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதை எண்ணியபடியே ஜப்பானுக்குத் திரும்பிய ஹோஷி தகாயுதிக்கு விசித்திரமான கனவு வந்திருக்கிறது. கடந்த காலத்தில் உத்தரகண்ட்டில் இருப்பது போலக் காட்சி தென்பட, அந்தக் கனவு தனது  வாழ்க்கையையே மாற்றிவிட்டதாகக் கூறியிருக்கிறார் ஹோஷி தகாயுகி.

தனது தொழிலை நிர்வாகிகளிடம் ஒப்படைத்த அவர், முழுநேர சிவ பக்தராக காவி உடைக்கு மாறினார். டோக்கியோவில் சிவனுக்காகக் கோயில் ஒன்றைக் கட்டி பூஜைகளையும் செய்து வருகிறார். பால கும்ப குருமுனி என்ற பெயரால் அறியப்படும் அவர், 20 சீடர்களுடன் இந்தியா வந்து, கன்வர் யாத்திரையில் பங்கெடுத்துக் கொண்டார். அத்துடன் கன்வர் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்காக, டேராடூனில் 2 நாள் உணவு முகாமையும் நடத்தி வருகிறார்.

புதுச்சேரியில் 35 ஏக்கர் நிலத்தில் பெரிய சிவன் கோயிலை கட்டவுள்ளதாகவும், உத்தரகாண்டில் ஆசிரமத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஜப்பானியத் தொழிலதிபர் ஒருவர், தமிழகத்தில் மனமாற்றம் அடைந்து,  சிவபக்தராக வலம் வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது.

Tags: கோயில்Japanese businessman who became a Shiva devotee: Plans to build an ashram and temple in Uttarakhandசிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர்உத்தரகாண்டில் ஆசிரமம்
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

Next Post

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

Related News

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies