பொள்ளாச்சி அருகே சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அப்புறப்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி அடுத்த உடுமலை சாலையில் உள்ள அரசூர் பிரிவில், பத்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை, சிதலமடைந்து ஆபத்தான முறையில் காணப்படுவதாக, தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடை பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் தமிழ் ஜனம் செய்தி தொலைக்காட்சிக்கு அரசூர் பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.