அஜித் குமார் கொலை வழக்கை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, சிபிஐ தரப்பில் திருப்புவனம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், திருப்புவனம் போலீசாரால் வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தனிப்படை காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், வழக்கின் ஆவணங்களும், கைது செய்யப்பட்டுள்ள 5 காவலர்களும் திருப்புவனம் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இதற்கிடையே கைதான 5 காவலர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில்,
வழக்கு சார்ந்த ஆவணங்களையும், கைதானவர்களின் நீதிமன்ற காவலையும் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சிபிஐ தரப்பில் திருப்புவனம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.