திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்
Jul 30, 2025, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Jul 29, 2025, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கினால் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள்  பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனம்பள்ளி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு அரசுப்பள்ளி மாணவிகள், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கல்லூரி மாணவி என நான்கு பேருக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

வயது வித்தியாசமின்றி மனநலம் குன்றிய சிறுமியைக் கூட பாலியல் ரீதியாக வேட்டையாடுமளவிற்கு தமிழகத்தில் குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது என்பதைத் தான் இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதுசரி, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் பள்ளிச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்த குற்றவாளியின் சிசிடிவி அடையாளங்கள் தெரிந்தும் அவனைக் கைது செய்ய வாரக்கணக்கில் எடுத்துக் கொண்ட திமுகவின் ஏவல்துறையைக் கண்டால் குற்றவாளிகள் பயப்படுவார்களா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கினால் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் என்பதை நாமும் பலமுறை எடுத்துக் கூறிவருகிறோம், பல போராட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், போராட்டக்காரர்களை எப்படி அடக்கி ஒடுக்கி பொய் வழக்கு போடலாம் என்பதிலும் மற்ற மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பேசி திசைத்திருப்புவதிலும் அக்கறையுடன் செயலாற்றும்  திமுக  அரசு, பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் கோட்டை விட்டுவிடுகிறது.

ஆக, இனி இந்த உதவாத அரசையோ அல்லது கட்டப்பஞ்சாயத்து காவல்துறையையோ நம்பி பயனில்லை. நமது வீட்டுப் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு நாம் தான் பொறுப்பு. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும், தமிழகப் பெண்களின் கண்ணியம் காக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: பிஜெபிnews dmkWomen are afraid to go out under DMK rule: Nayinar NagendranDMKtn bjpNayanar Nagendran mla
ShareTweetSendShare
Previous Post

கிங்டம் திரைப்படம் ரஜினியின் படங்கள் போல இருக்கும் : விஜய் தேவரகொண்டா

Next Post

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

Related News

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் – மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies