இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டபோதும் எந்த பலனும் ஏற்படவில்லை.
ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழிக்காமல் ஓயமாட்டோம் என சூளுரைத்துள்ள இஸ்ரேல், காசாவில் தினந்தோறும் அப்பாவி பொதுமக்களை கொன்று வருகிறது.
மனித உரிமை மீறலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள உலக நாடுகள், அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனை பாலஸ்தீன அரசும் உறுதி செய்துள்ளது.