லண்டனில் இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் இந்திய கிரிக்கெட் அணியினர் சந்திப்பு மேற்கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இதில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5வது போட்டி வரும் 31ம் தேதி தொடங்குகிறது.
இந்த சூழலில், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணியினர் இந்தியத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து வீரர்கள் கையொப்பமிட்ட பேட்டை பரிசாக அளித்தனர்.