மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மகாகாலேஸ்வரர் கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் சுவாமி தரிசனம் செய்தார்.
நாக பஞ்சமியையொட்டி, மகாகாலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.