சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பேக் ஒன்று கிடைத்துள்ளது.
அதனைக் கைப்பற்றி ஆய்வு செய்த போது 2.8 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை அண்ணன் நகர் மேற்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையிடம், ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.