ஜெயங்கொண்டம் அருகே அரசுப் பேருந்துக்குள் புகுந்து பட்டாக்கத்தியுடன் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் இறவாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் முன்னூரான்காடுவெட்டி பகுதி பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது சிவக்குமாருக்கும், அங்கிருந்த சில இளைஞர்களுடன் இடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், அந்த இளைஞர்கள் பட்டாக்கத்தி மற்றும் கட்டைகளுடன் சிவக்குமாரை ஓடஓட விரட்டி தாக்குதல் நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்தில் சிவக்குமார் ஏறியுள்ளார். இளைஞர்களும் பேருந்தில் ஏறி அவரை சரமாரியாகத் தாக்கினர்.
தாக்குதலில் காயமடைந்த சிவக்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேரை காவல்துறை தேடி வருகின்றனர்.