கீழடி விவகாரத்தில் திமுக அரசு வேஷம் போடுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பேட்டியளித்த அவர், கீழடி ஆய்வை உலகிற்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
திமுக அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வ பணிகளையும் செய்யவில்லை என்றும், அதிக கடன் வாங்கி உள்ளதாகவும், அதில் அதிகளவு கொள்ளையடித்துள்ளதாகவும் கூறினார்
தமிழகத்தில் நடக்கும் கொலைகளை நிறுத்த திமுக அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்றும், அதிமுக – பாஜக கூட்டணி பலமாக உள்ளதால் திமுக கூட்டணி கலகலத்து போய்விட்டதாகவும் ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.