இந்தியாவுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் எனும் டிரம்பின் அறிவிப்புக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இருதரப்பு வர்த்தகம் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும், இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு என்ற அறிவிப்பு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் என தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சகம், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோரின் நலனை பாதுகாப்பதில் அரசு முக்கியத்துவம் அளிக்கும் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது.
மேலும், பிற நாடுகள் உடனான ஒப்பந்தங்களை போல நாட்டின் நலனுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்யும் எனவும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.