நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தாததே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் தோல்வி அடைந்ததற்கான காரணமென வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது.
டி20 கிரிக்கெட்டில் அதிரடி வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்னில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், டி20 தொடரில் அடைந்த படுதோல்வி குறித்துப் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் ஒரு பேட்டிங் குழுவாக எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவித்தார்.