தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடர் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.