தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் நெல்லை அரசு மருத்துவமனை முன், சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
நெல்லை அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலை கடந்த ஐந்து மாதங்களாகக் குண்டும் குழியுமாகக் காணப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
இது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சாலையைச் சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.