வங்கிகள் திருத்தச் சட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் திருத்தச் சட்டம் கடந்தாண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் விதத்தில் கொண்டு வரப்பட்டுள்ள வங்கிகள் திருத்தச் சட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் படி வங்கியில் ரொக்கம் மற்றும் நிலையான வைப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரா்களை நியமிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களின் பதவிக்காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.