அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான போர் விமானம், பயிற்சியின் போது கீழே விழுந்து நொறுங்கியது.
மத்திய கலிபோர்னியாவின் ப்ரெஷ்னோ நகரில் இருந்து தெற்கு மேற்கு பகுதியின் 64 கிலோ மீட்டர் தொலைவில் கடற்படைக்குச் சொந்தமான லீமோர் கடற்படை விமான தளம் அமைந்துள்ளது.
இங்கு எப்-35சி ரக போர் விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானி வெளியே குதித்து உயிர் தப்பினார்.