சவுதி அரேபியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து விழுந்ததில் 23 பேர் படுகாயமடைந்தனர்.
மெக்கா நகரின் கிழக்கே தாயிஃபில் உள்ள கீரின் மவுண்டன் என்ற பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள 360 டிகிரியில் சுழலும் ராட்டினத்தில் ஆண்கள், பெண்கள் எனப் பலரும் சவாரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ராட்டினத்தின் மையப் பகுதி துண்டிக்கப்பட்டது. இதனால் ராட்டினத்தில் சவாரி செய்த 23 பேர் காயமடைந்தனர்.
அதில் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராட்டினம் உடைந்து விழும் காட்சி வெளியாகி உள்ளது.