அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்தலில் ஒன்று சேர்ந்த பாஜக – அதிமுகவுக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.
எல்லாரும், எல்லாருடனும் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை என கூறிய அவர்,கூட்டணி தொடர்பாக தவெகவும் பேசவில்லை; தானும் பேசவில்லை என தெரிவித்தார். எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம் எனறும் ஓபிஎஸ் கூறினார்.