இந்திய கடலோர காவல்படைக்கு வலுசேர்க்கும் வகையில் ஹோவர் கிராஃப் படகுகளை தயாரிக்கும் பணி கோவாவில் தொடங்கியது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு ராணுவத்தின் வலிமையை மேலும் அதிகப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக, கடற்படையை நவீனப்படுத்த ப்ராஜெக்ட் 18 என்ற பெயரில், 144 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சுமந்து செல்லும் வகையிலான கப்பலை தயாரிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
அதேபோல், தற்போது ஹோவர் கிராஃப் படகுகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வேலையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது கோவாவில் தொடங்கியுள்ளன.
கடல் பகுதியில் அதிநவீன முறையில் ரோந்து பணி மேற்கொள்ளவும், தேடல் மற்றும் மீட்பு பணிகளில் விரைந்து ஈடுபடும் வகையிலும் இந்த ஹோவர் கிராஃப் படகுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.