விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் திரையரங்குகளில் ரிலீசானது.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான இவர், தெலுங்கு சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
இவர் நடித்த கிங்டம் படம் திரையரங்குகளில் இன்று வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவில் மட்டும் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.