விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான படம் தலைவன் தலைவி. கணவன் – மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது.