பெங்களூருவில் பணத்திற்காக 12 வயது சிறுவனை கடத்தி கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள சாந்திநிகேதன் லேஅவுட்டில் வசித்து வரும் தம்பதியின் வீட்டில் ஆக்டிங் ஓட்டுநராக குருமூர்த்தி என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
தம்பதியின் வீட்டிற்கு அடிக்கடி ஆக்டிங் ஓட்டுநராக வந்து சென்ற குருமூர்த்தி, அவர்களது 12 வயது மகனை கடத்தி பணம் பறிக்கத் திட்டம் தீட்டியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு டியூஷன் சென்ற சிறுவன் இரவு வீடு திரும்பாததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
மேலும், மகன் காணாமல்போனது குறித்துக் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்த நிலையில், தம்பதியைத் தொடர்பு கொண்ட குருமூர்த்தி சிறுவனை கடத்தி விட்டதாகவும், 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் மகனை விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
பணத்தைக் கொடுக்கப் பெற்றோர் ஒப்புக்கொண்ட நிலையில், பன்னேர்கட்டா வனப்பகுதியில் சிறுவனின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிறுவன் கொலை வழக்கில் தொடர்புடைய குருமூர்த்தி உள்ளிட்ட இருவரைச் சுட்டுப் பிடித்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.