குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்தார். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.
இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், தேர்தல் நடைபெறும் செப்.9- ஆம் நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.